கல்கி அவதாரத்தையும் கலியுகத்தையும் பற்றி விவரிக்கும் தமிழ் நூல்கள்

அகிலத்திரட்டு அம்மானை

கட்டு அடங்கா கலியை கருவறுக்க வந்தது உண்டால்.நாங்கள் உம்மைக் கண்டு நலம்பெறுவது எப்படி காண். தாங்கள் மனதிரங்கித் தான் உரைக்க வேணும் என்றான். கருதி வருந்தினால் கட்டுரைக்கேன் உன்னோடு.ஒருவர் அறியாத உபதேசம் ஆனது தான்.இரப்ப வடிவாக நானும் வருவேன் காண். பரப்ப வடிவாக பரமசிவன் வருவார் என்று முனிக்கு எம்பெருமாளும் உரைத்தார். அன்று முனியும் அதுக்கேது உரைக்கலுற்றார். எந்த சாதியிலே எம்பெருமாள் வருவதுதான்.அந்த சாதியை அருளும் என்று போற்றினானே. இகாபரத்தை நினைத்து எழு பிள்ளை ஈன்றெடுத்து மகாபரன் செயலால் மக்களுக்கு என் சொத்தீய. நான் உபதேசித்து நாட்டில் வருவேன் காண். . . .

கல்கி புராணம் மூலம்1 மூலம்2

விரதங்களை விட்டு விராத்யர்களாவர். உப்பு,நெய்,எண்ணெய் முதலியவைகளை விற்பார்கள். க்ரூரமான ஸ்வபாவமுள்ளவர்களாகவும் சிற்றின்பம்,உணவு இவைகளையே முக்கிய கார்யமென கருதுபவர்களாகவும் பிற ஸ்திரீகளிடம் ஆசை உள்ளவர்களாகவும் மதமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.போக்கிரிகளாகவும் தன் வீட்டை விட்டு மடம்,கோயில் முதலிய இடங்களில் வஸிப்பவர்களாகவும் இருப்பார்கள். பதினாறு வயதில் கிழத்தனம் வந்து இறப்பார்கள்.அதே தீர்க்காயுஸ் ஆகும்.தலைமயிரை அலங்கரித்துக் கொள்வதிலும் புதிது புதிதாக வேஷம் தரிப்பதிலும் பேரவா கொண்டிருப்பார்கள்.ஆண்களும் பெண்களும் ஆபரணத்தில் ஆசை கொள்வர்.வட்டியால் ஜீவிக்கும் பிராமணனே பூஜிக்கத்தக்கவன் ஆவான். பணம் படைத்தவனே நற்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படுவான்.அரசர் குடிகளைப் பிடுங்கித்தின்பர்.மேகம் விசித்திரமாக மழை பொழியும்.பூமி நன்கு விளையாது. ஆணும் பெண்ணும் ஆசைப்பட்டால் போதும்.அதே விவாஹத்திற்கேற்ற பொருத்தமாகும். . . . .

பைபிள்-வெளிப்படுத்தின விசேஷம்

இதோ,மேகங்களுடனே வருகிறார்;கண்கள் யாவும் அவரைக் காணும்.அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியின் கோத்திரத்தரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.அப்படியே ஆகும்,ஆமென். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஒமேகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி , ஆசியாவிலிருக்கிற எபேக,சிமிர்னா,பெர்கமு,தியத்தீரா,சர்தை,பிலதெல்பியா,லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பியது. அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தை பார்க்கத் திரும்பினேன். திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். . . . .

கூர்ம புராணம் மூலம்1 மூலம்2

கலியில் தர்மம் ஒரே பாததுடனிருப்பதால் பல அதர்மங்களுண்டாகும்.கலியில் மத ஆசாரங்களை எவருங் கைகொள்ள மாட்டார்கள். ஆதலால் நோயதிகமாகும்.அல்பாயுஸுகளாகவே எல்லோரும் இறப்பர். வேதத்தை மறப்பர்.யாகம் செய்ய மாட்டார்கள்.தானம் கொடுக்க மாட்டார்கள். ஆதலால் மழை நிறையப் பொழியாது.அடிக்கடி பஞ்சம் தோன்றும்.பொய்யும் திருடும் அதிகமாகும். பாட்டும் ஆட்டமும் அதிகரிக்கும்.யாசகர்கள்,சோற்றுகடை அதிகமாகும்.பெண்டுகள் தம் தலைமயிரைக் கத்தரித்து விற்பார்கள்.கற்பு குறையும்.காஷாயந்தரித்து பலர் உலகை வஞ்சிப்பார்கள்.பக்தியில்லாத பாட்டுக்களே அதிகமாகும். வாம பூஜை அதிகரிக்கும்.கர்ம மார்க்கத்தை தூஷித்துப் போலி வேதாந்தம் பேசுவர் அதிகமாவர். சிசுஹத்தியும் கர்ப்பஹத்தியும் அதிகமாகும். . . . .

பவிஷ்ய புராணம்

அவர் நீண்டநேரம் யோசனை செய்துவிட்டுக் குருண்ட(இங்கிலாந்து) பூமியிலிருந்து வியாபார நோக்கோடு வருபவர்கள் இங்கேயே தங்கி விடுவார்கள். மேற்குத் திக்கிலிருந்து வரும் நாட்டு மன்னர் விக்ட்(விக்டர்) அவரின் மகாராணி விகடாவதி(விக்டோரியா) அனுமதியுடன் இந்த நாட்டை ஆள்வார்கள். அதன் பின் குருண்ட ராஜாவின் ஆட்சி தொடரும். அவர்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்காக இல்லாத போது மேகல(மெக்காலே) பிரபு சட்டத்தை ஒழுங்கு செய்வார். அதன் பின் வேவல் பிரபு வரை சொல்லப்படுகின்றது. பின்னால் பூகம்பம் ஏற்பட்டு நாட்டைச் சீரழிக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியில் ஜனங்கள் திக்கு திசை தெரியாமல் நடப்பார்கள்.கலியுகத்தில் தர்மங்கள் அழியத் தொடங்கும். அப்போது கல்கி அவதரிப்பார். . . .
ஆங்கிலத்தில் சுருக்க உரை இங்கே உள்ளது.

மகாபாரதம்

கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள். பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும். சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும். உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும். மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள். . . . .

ஸ்ரீமத் பாகவதம் மூலம்1 மூலம்2

தர்மம்,சத்தியம்,தூய்மை,பொறுமை,கருணை,ஆயுள்,தேகபலம், ஞாபகசக்தி, ஆகியன குறைந்து கொண்டே வரும். செல்வம் மட்டுமே ஒருவனின் நற்குணத்திற்கும்,பிறப்பிற்கும்,நடத்தைக்கும் அடையாளமாக கருதப்படும். சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்திற்கு கீழ் நடத்தப்படும். வியாபரத்தில் வஞ்சகம் நிறைந்து இருக்கும்(ஊழல்). வயிற்றை நிரப்புவதே வாழ்வின் நோக்கமாக இருக்கும். பசி,மழை ,காற்று,புயல்,வெப்பம்,என்பவற்றாலும் நோய்,பசி,சண்டை சச்சரவுகள் என்பவற்றாலும் மக்கள் சித்திரவதைப்படுவர். இத்தைகைய காலத்தில் பரமபுருசன் கல்கி பகவான் பூமியில் அவதரிப்பார். அவர் தூய ஆன்மீக ஞானத்துடன் செயற்பட்டு பூமியில் நித்திய தர்மத்தை நிலை நாட்டுவார். . . . .

ஸ்ரீமத் பகவத் கீதை

பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது ப்ரக்ருதியில் நிலை பெற்று ஆத்ம மாயையால் பிறப் பெய்துகிறேன். பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ,அப்போது நான் என்னைப் பிறப்பித்துக்கொள்ளுகிறேன். நல்லோரைக் காக்கவும்,தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன். எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙன மென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான். விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடக்கலம் புகுந்து ஞானத் தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர். . . .

திருக்குர்ஆன்

நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது.ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும். அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் இவ்வேதத்தை அருளினோம். ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும்,நேர்வழியும்,அருளும் வந்துவிட்டது. மலக்குகள் அவர்களிடம் வருவதையோ அல்லது உம் இறைவனே வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நன்மையும் சம்பாதிக்காமலிருந்துவிட்டு,அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி "(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள். நாமும் எதிர் பார்க்கின்றோம்" என்று(நபியே) நீர் கூறும். . . .

இதர மூலங்கள்
Free Web Hosting