கிருஷ்ணரின் பத்தாவது அவதாரம்- கலியுக கல்கி அவதாரம்

”எவ்வெப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலை தூக்குகிறதோ, அவ்வப்பொழுதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.சாதுக்களைக் காப்பதற்கும் துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்” என்று கீதையில் உரைத்தபடி இந்த கலியுகத்தில் கிருஷ்ணர் ஸ்ரீலஹரி கிருஷ்ணா-வாக கல்கி அவதாரமாக அவதரித்துள்ளார்.

வாழ்க்கை குறிப்புகள்

மூணாறில் உள்ள தேயிலைத்தோட்டம் ஒன்றில் 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று தேவராசையா-நேசம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார் பாலாசீர் ஸ்ரீலஹரி முத்துக்கிருஷ்ணா. அவர் பிறந்த சில நாட்களிலேயே அவர்கள் குடும்பம் இலங்கைக்கு குடிபெயர்ந்தது. பாளையங்கோட்டையிலுள்ள புனித யோவான் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின்பு இலங்கையில் ஒரு வருடம் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார். பின்பு கொலொம்போ-வில் உள்ள வெஸ்லி கல்லூரியில் லண்டன் மெட்ரிக் சான்றிதழ் பெற படித்தார். அதன்பின்பு சென்னை கிறிஸ்துவ கலைக்கல்லூரியில் B.A. படிப்பில் சேர்ந்தார். அது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம். ராணுவத்தில் சேர விரும்பி சில காலம் பயிற்சிகளை எடுத்தார் பாலாசீர். இதை அறிந்த அவரது தந்தை தேவராசையா வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தன்னோடு அழைத்துச்சென்றார். சிலகாலம் இலங்கையில் இருந்துவிட்டு இந்தியா திரும்பி படிப்பில் கவனம் செலுத்தலாயினார். இந்தியா திரும்பிய பிறகு பாளையங்கோட்டையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத்தொடர்ந்தார். 1942-ல் தேசிய தலைவர்கள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் இவர் தான் படிக்கும் கல்லூரியில் ஒரு மாணவர் போராட்டம் நடத்தினார்.இதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகளால் காவலர்களின் கைது முயற்சியில் இருந்து தப்புவதற்காக இவர் தனது தந்தையால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு ஒரு டீ எஸ்டேட்டில் சுருக்கெழுத்தராக வேலை கிடைத்தது. இந்த சமயத்தில்தான் அவருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்பட்டது. 1946 ஆம் ஆண்டு தனது தாயாருடன் விடுமுறையில் இந்தியாவிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு செல்லும்போது கடவுள் தனக்கு கனவில் உரைத்த வண்ணம் துணையை கண்டுகொண்டு மண நிச்சயம் செய்தனர். அச்சமயம் தனது தந்தை இலங்கையில் இருந்ததால் திருமணம் ஆறு மாதம் தள்ளிப்போனது. ஆறு மாத காத்திருப்புக்கு பின்பு அவரது திருமணம் 26 மே 1947-ல் நடக்கலாயிற்று.

தனது முதல் குழந்தை கொடுமையான நோயினால் பீடிக்கப்பட்டு இருந்த சமயம் அவர் தன் குழந்தை முற்றிலும் குணம் பெற்று விட்டால் தன் மீதி வாழ்க்கையை கடவுளுக்காக அர்ப்பணிப்பதாக கடவுளிடம் வேண்டினார் . குழந்தை முற்றிலும் குணம் பெற்ற பின்பு அவர் அந்த வேலையை விட்டுவிட்டு ஏற்காட்டில் உள்ள ஓர் எஸ்டேட்டில் வேலையில் அமர்ந்தார். அதன் பின் வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலையை தொடர்ந்தார். பின்பு தான் கண்ட கனவுகளின் மூலம் உடனடியாக(1953ல்) தனது வேலையை விட்டு விட்டு கடவுளுக்கான சேவையில் தன்னை அர்ப்பணித்தார். தென் இந்தியாவில் பல பெருநகரங்களிலும்,இலங்கையிலும் பலமுறை ஆன்மீக கூட்டங்கள் நடத்தினார். 1963ஆம் ஆண்டு தாமிரபரணி நதிக்கரையில் மனுஜோதி ஆசிரமத்தை(63 ஏக்கர்) நிறுவினார். 1967-களில் மேற்கத்திய நாடுகளில் ப்ரென்ஹாமை பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் பல ஆசீர்வாதக்கூட்டங்களை நடத்தினார். 1969-ல் இவரின் போதனைகளைக் கேட்ட ப்ரென்ஹாமின் வழியாளர்கள் அபாரமான வல்லமை நிறைந்த கருத்துக்களை உணர்ந்தனர். 21 ஜூலை 1969-ல் மனிதன் முதன்முதலாக சந்திரனில்(அப்பல்லோ-11) கால்வைத்த அக்கணத்தில் கடவுள் இவருக்குள் இறங்கி வந்தார். இந்த நிகழ்விலிருந்து அவர் கல்கி அவதாரமாக அறியப்பட்டார்.

அதன் பின்பு அவரின் சொற்பொழிவுகள் அனைத்தும் கடவுளால் நேரடியாக உரைக்கப்பட்டவையே. வேதங்களில் மறைந்துள்ள ரகசியங்களையும்,மனிதர்களால் மறைக்கப்பட்ட பல உண்மைகளையும் எடுத்துரைத்தார். பல அதிசயங்களும் அற்புதங்களும் நடந்தேறின.

இவரது வாழ்க்கை குறிப்பை முழுவதுமாக அறிந்து கொள்ள கிழக்கே தோன்றிய மின்னல் , மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் என்ற தலைப்புகளில் மனுஜோதி ஆசிரமத்தால் வெளியிடப்பட்டுள்ள குறுந்தகடுகளைப் பாருங்கள். குறுந்தகடுகளை இலவசமாக பெற்றுக்கொள்ள கடித வழியாகவோ,தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ மனுஜோதி ஆசிரமத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Free Web Hosting