இந்த உலகம் மிக விரைவில் அழியப் போகிறது

வெள்ளைக் குதிரையில் கல்கி.?

இவரைத் தெரிகிறதா.?

இந்த புத்தகம் யாரைப் பற்றியது.?

மேலே கண்ட மூன்று புகைப்படங்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா.?

கீதை என்ன சொல்கிறது.?

எவ்வெப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலை தூக்குகிறதோ, அவ்வப்பொழுதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.சாதுக்களைக் காப்பதற்கும் துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.
- பகவத்கீதை(4:7)

பைபிள் என்ன சொல்கிறது.?

திருடனைப் போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய் (வெளி.3:3) திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே, நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். (லூக்கா 12:39, 40)

இதர பல வேதங்களிலிருந்து

அகிலத்திரட்டில் இருந்து

கட்டு அடங்கா கலியை கருவறுக்க வந்தது உண்டால்.நாங்கள் உம்மைக் கண்டு நலம்பெறுவது எப்படி காண். தாங்கள் மனதிரங்கித் தான் உரைக்க வேணும் என்றான். கருதி வருந்தினால் கட்டுரைக்கேன் உன்னோடு.ஒருவர் அறியாத உபதேசம் ஆனது தான்.இரப்ப வடிவாக நானும் வருவேன் காண். பரப்ப வடிவாக பரமசிவன் வருவார் என்று முனிக்கு எம்பெருமாளும் உரைத்தார். அன்று முனியும் அதுக்கேது உரைக்கலுற்றார். எந்த சாதியிலே எம்பெருமாள் வருவதுதான்.அந்த சாதியை அருளும் என்று போற்றினானே. இகாபரத்தை நினைத்து எழு பிள்ளை ஈன்றெடுத்து மகாபரன் செயலால் மக்களுக்கு என் சொத்தீய. நான் உபதேசித்து நாட்டில் வருவேன் காண். . . .

மகாபாரதத்தில் இருந்து

கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள். பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும். சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும். உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும். மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள். . . . .

பாகவதத்தில் இருந்து

தர்மம்,சத்தியம்,தூய்மை,பொறுமை,கருணை,ஆயுள்,தேகபலம், ஞாபகசக்தி, ஆகியன குறைந்து கொண்டே வரும். செல்வம் மட்டுமே ஒருவனின் நற்குணத்திற்கும்,பிறப்பிற்கும்,நடத்தைக்கும் அடையாளமாக கருதப்படும். சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்திற்கு கீழ் நடத்தப்படும். வியாபரத்தில் வஞ்சகம் நிறைந்து இருக்கும்(ஊழல்). வயிற்றை நிரப்புவதே வாழ்வின் நோக்கமாக இருக்கும். பசி,மழை ,காற்று,புயல்,வெப்பம்,என்பவற்றாலும் நோய்,பசி,சண்டை சச்சரவுகள் என்பவற்றாலும் மக்கள் சித்திரவதைப்படுவர். இத்தைகைய காலத்தில் பரமபுருசன் கல்கி பகவான் பூமியில் அவதரிப்பார். அவர் தூய ஆன்மீக ஞானத்துடன் செயற்பட்டு பூமியில் நித்திய தர்மத்தை நிலை நாட்டுவார். . . . .

கலியுகத்தின் அடையாளங்கள்

தர்மம் அழியும்

சாதி வரம்பு தப்பிநிலை மாறும். பாரிகளுக்கு மூப்பு பார்மீதில் உண்டாகும்.நீசக் குலங்கள் நெளு நெளென பூமி தன்னில் தேசம் இட்டதெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள். வானத்திலிடிகள் வருடா வருடந்தோறும் நீணிலத்திலே விழும் நின்று வானம் முழங்கும்.பூமி குலுங்கும் பொழுது மிகச்சாய்ந்து வரும். சீமையில் சோளம் சிறுபயறு மேவிவரும் இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும். தலைப்படலம் வாயும் தட்டழிந்து வெடித்து வரும். சிவ ஆலயங்கள் எல்லாம் தேய்ந்து சுவர் இடியும். கிணறு பாழாகும் கீழ் ஊற்றுப் பொய்யாகும். காமோக வெறியால் கன பழிகள் உண்டாகும். மாட்டின் வயிற்றில் மனிதர் போல்தான் பிறக்கும். நாணி இறப்பார் நஞ்சு தின்று சாவார்கள். கேணிக்குள்ளே சாவார் கீறிக்கொண்டே சாவார். வைரம் விழுங்கி மாழ்வார் சில பேர்கள். துயரம் பொறுக்காமல் தோயம் அதிலே விழுவார். ஈக்கள் பெருகும் எறும்பு மிகப் பெருகும். சன்னாசி நிஷ்டை தவறி அலைவார்கள்.கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும். . . . .

Free Web Hosting